கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் இன்று முதல் 12ஆம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலம் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
Categories