இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.
அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரியில் இன்று முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மளிகை மற்றும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி. டாஸ்மார்க் உள்ளிட்ட மதுக்கடைகளை திறக்க அனுமதி இல்லை. ஆட்டோக்கள், டாக்ஸி வாகனங்கள் ஓடவும் அனுமதி இல்லை. பெட்ரோல் பங்குகள், பாலகங்கள் மற்றும் மருந்தகங்கள் 24 மணி நேரமும் செயல்படும் அனுமதிக்கப்பட்டுள்ளது. பெரிய கடைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு அனுமதி இல்லை. இந்த விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.