Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இன்று முதல் 144 தடை உத்தரவு அமல்…. இதற்கெல்லாம் அனுமதி இல்லை…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 25ஆம் தேதி வரையிலும், அக்டோபர் 25 முதல் 31ஆம் தேதி வரையிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் பரமக்குடியில் செப்டம்பர் 11ஆம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு நாள் மற்றும் அக்டோபர் 30ம் தேதி கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து எஸ்பி தங்கதுரை அறிக்கையின் அடிப்படையில் செப்டம்பர் ஒன்பதாம் தேதி முதல் 25ஆம் தேதி வரையும்,அக்டோபர் 25 முதல் 31ஆம் தேதி வரையும் சட்ட ஒழுங்கை பாதுகாக்க 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. மேலும் இந்த தடைக்காலத்தில் வெளி மாவட்ட வாடகை வாகனங்களுக்கு ராமநாதபுரத்திற்குள் நுழைய அனுமதி இல்லை. மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற சொந்த வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |