Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 17ஆம் தேதி வரை வங்கிகள் இயங்காது…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் அக்டோபர் மாதம் தொடர் பண்டிகைகளை முன்னிட்டு வங்கிகளுக்கு பொது விடுமுறை அறிவித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த மாதம் தசரா, தீபாவளி, ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் நவராத்திரி போன்ற பல்வேறு பண்டிகைகள் அடுத்தடுத்து வர உள்ளது. இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு இருபத்தி ஒரு நாட்கள் விடுமுறை என்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்திருந்தது. இது மாநிலத்திற்கு ஏற்ப மாறுபடும். அதன்படி தமிழகத்தில் இந்த மாதம் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று முதல் 17ஆம் தேதி வரை வங்கிகள் இயங்காது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கி தொடர்பான வேலைகளும் ஆன்லைன் மயமாகி விட்டதால் 24 மணி நேரமும் வீட்டிலிருந்தே மொபைல் போன் மூலம் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் வாடிக்கையாளர்கள் சிரமமின்றி ஆன்லைன் வாயிலாகவும் ஏடிஎம் எந்திரம் வாயிலாகவும் தடையின்றி சேவைகளை பெற முடியும் என்று வங்கிகள் தெரிவித்துள்ளது.

Categories

Tech |