தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னையில் இன்று முதல் ஜூன் 24ஆம் தேதி வரை இரண்டாம் தவணை கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொள்ள சிறப்பு முகாம் நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இரண்டாம் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் முகாமில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். தடுப்பூசி முகாம்கள் குறித்த விவரங்களை http://covid19.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.