Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் 25 மின்சார பேருந்துகள்…. டெல்லி அரசு அதிரடி அறிவிப்பு…!!!

பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் டெல்லியில்  காற்று மாசுபடுவதை தடுக்கும் வகையில் இன்று முதல் 25 மின்சார பேருந்து இயக்கப்படுகிறது என்று டெல்லி மாநில போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இந்த பேருந்துகள் மின்சார ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |