Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் 293 எக்ஸ்பிரஸ் ரயில்களும்…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு… !!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததால் படிப்படியாக போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டது. அந்த வகையில் தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்பட்ட அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்த அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் மீண்டும் வழக்கமான பெயர்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அதன்படி நடப்பு கால அட்டவணைப்படி வழக்கமான பெயர்களில், வழக்கமான ரயில்வண்டி எண்களில் மீண்டும் அனைத்து ரயில்களும் இயக்கப்படும். கொரோனா காலத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், செந்தூர் எக்ஸ்பிரஸ், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தெற்கு ரயில்வேயில் இயங்கும் 293 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் வழக்கமான பெயர்களில் இன்றுமுதல் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |