குற்றால அருவியில் இன்று முதல் அடுத்த 3 நாட்கள் குளிப்பதற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தொற்று நோய் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டி தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகள் மற்றும் சுற்றுலாதலங்களில் இன்று முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை ஆகிய மூன்று தினங்கள் பொது மக்கள் குளிப்பதற்குதடை விதிக்கப்படுகிறது.
பொது மக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.