சேலம் ரயில்வே நிலைய படிமனைகளில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அரக்கோணம் மற்றும் சேலம் பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,அரக்கோணத்தில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு காலை 10.50 மணிக்கு செல்லும் ரயில் நவம்பர் 28, 29,30 ஆகிய தேதிகளில் சேலம் ரயில் நிலையத்தின் முந்தைய ரயில் நிலையமான கருப்பூர் வரை செல்லும்.
பின்னர் மறு மார்க்கமாக சேலத்தில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு அரக்கோணத்திற்கு இரவு 8.45 மணிக்கு செல்லும் ரயில் நவம்பர் 28, 29, 30ஆகிய தேதிகளில் கருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இடத்திற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.