Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 30 ஆம் தேதி வரை….. சுழற்சி முறையில் மின்தடை….? வெளியான முக்கிய அறிவிப்பு …!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் பராமரிப்பு பணிகள் மாதம் தோறும் நடைபெற்று வருகிறது. இதனால் மின் தடை ஏற்படுவது வழக்கம். இந்த மின் பராமரிப்பு பணி நடைபெறும் போது மின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக சில மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு மின்தடை செய்யப்படும். இதற்கான அறிவிப்பு முன்னதாகவே அறிவிக்கப்பட்டு விடும். மின் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின்வினியோகம் மீண்டும் இருக்கும். இந்த நிலையில் சீர்காழி பொறையார் பகுதிகளில் இன்று முதல் சுழற்சி முறையில் மின் தடை செய்யப்பட உள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீர்காழி மின் கோட்டத்துக்குட்பட்ட வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, பொறையார், மணல்மேடு, ஆச்சாள்புரம், அரசூா், மேமாத்தூர், எடமணல், திருமங்கலம், கிடாரம்கொண்டான் ஆகிய துணை மின் நிலையங்களில் கடந்த 6 மாதங்களாக பல்வேறு காரணங்களால் பராமரிப்பு பணிகள் செய்யப்படவில்லை. இந்நிலையில், இன்று முதல் 30-ஆம் தேதி மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளுக்கு சுழற்சி முறையில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |