தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பாதிப்பு சற்று குறைந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரயில்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை கடற்கரை வேளச்சேரி மார்க்கத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக 26 மின்சார ரயில்கள் இன்று முதல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை- அரக்கோணம் இடையே வாரத்தின் அனைத்து நாட்களும் ஒரு ரயில் கூடுதலாக இயக்கப்படுகிறது. இவை அனைத்தையும் சேர்த்து இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் 447 ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.