வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சில நாட்களாகவே தமிழகத்தின் சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு மற்றும் அதனை ஒட்டிய வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நீலகிரி, கோவை, மேற்கு தொடர்ச்சி, தென் டெல்டா மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும். தமிழகத்தில் இன்று முதல் 9ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும். சென்னையில் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது.