Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் 5 நாட்களுக்கு…. பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் சென்ற 2020ஆம் வருடம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்து கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது சென்ற 2 வருடங்களுக்கு பின் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்படத் தொடங்கி இருக்கிறது.

மேலும் பல மாநிலங்களில் பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. பொதுவாக இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு மே மாதம் முழுதும் மாணவர்களின் நலன் கருதி விடுமுறை அறிவிக்கப்படும். இந்நிலையில் இந்த வருடம் கொரோனா காரணமாக குறைவான நாட்களே பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று இருக்கிறது. இதற்கிடையில் இந்தியாவில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒடிசா மாநிலத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது என அம்மாநில பள்ளி மற்றும் உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால் தேர்வுகள் ஏதேனும் இந்த நாட்களில் இருந்தால் வழக்கம் போல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |