நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக 4 பயணிகள் ரயில்கள் இன்று முதல் 6 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகம் -கேரளாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில் நாகர்கோவில் – கோட்டயம் எக்ஸ்பிரஸ், கொல்லம்-திருவனந்தபுரம், கோட்டயம்-கொல்லம், திருவனந்தபுரம்-நாகர்கோவில் ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.