Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் 6 நாட்கள் வங்கிகள் இயங்காது…. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு…..!!!!!

நமது பணத் தேவையைப் பூர்த்தி செய்யும் மிக முக்கியமான இடமாக வங்கிகள் இருக்கின்றன. இதனிடையில் வங்கிகளில் சேமித்து வைத்திருக்கக்கூடிய பணத்தை எடுத்துக் கொள்ளவும், கடன் பெற்று கொள்ளவும், பிற பணப் பரிவர்த்தனைகளுக்கும் வங்கிகள் நம்முடைய வாழ்வில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. வங்கிகளின் விடுமுறை நாட்களை பொறுத்து நமது பணப் பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, அதன்படி செயல்பட்டால் தேவையற்ற அலைச்சலையும் நேர விரயத்தையும் தவிர்க்கலாம்.

வங்கிகளின் வேலை நாட்கள், விடுமுறை தினம் போன்றவற்றை முன்கூட்டியே தெரிந்துகொள்வது நல்லது ஆகும். அந்த அடிப்படையில் இன்று முதல் வங்கிகளுக்கு தொடர்ந்து ஆறு நாட்களுக்கு விடுமுறை வருவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த 6 நாட்களுக்கு தொடர்ந்து விடுமுறை என்பது இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தாது. ஆனால் சில இடங்களில் உள்ளூர் விடுமுறையை முன்னிட்டு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

ஜனவரி 18 – தைப்பூசம் (சென்னை)

ஜனவரி 22 – நான்காவது சனிக்கிழமை

ஜனவரி 23 – ஞாயிறு விடுமுறை

ஜனவரி 25 – இமாசலப் பிரதேச மாநிலம் உருவான நாள்

ஜனவரி 26 – குடியரசு தினவிழா

ஜனவரி 31 – அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும் விடுமுறை

அண்மையில்தான் பொங்கல் பண்டிகையையொட்டி சில தினங்களுக்கு வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது தொடர்ந்து 6 நாட்களுக்கு விடுமுறை வருவதால் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே தங்களது பணத் தேவைகளைத் திட்டமிட்டுக் கொள்ளலாம்.

Categories

Tech |