ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்த்தப்பட்டதால் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளான எஸ்பிஐ, பேங்க் ஆஃப் பரோடா, ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உட்பட பல்வேறு வங்கிகள் வட்டியை உயர்த்திய நிலையில் தற்போது இந்தியன் வங்கியும் கடன்களுக்கான அடிப்படை வட்டி வீதத்தை 4 சதவீதத்தில் இருந்து 4.40 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
இந்த புதிய வட்டி வீதம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. கடன்களுக்கான அடிப்படை வட்டி வீதம் உயர்வின் காரணமாக வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் ஆகியவற்றிற்கான EMI தொகையும் அதிகரிக்கும். இதனால் கடன் வாங்கியவர்கள் மாதாந்திர செலவு அதிகரிக்கும். இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் ரிசர்வ் வங்கி கடந்த வாரம் அவசர ஆலோசனை நடத்தி வட்டி வீதத்தை உயர்த்த முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.