தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை தடைசெய்யப்பட்டது. இதையடுத்து தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக பாதிப்பு படிப்படியாகக் குறைந்துள்ளதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் முதுமலை சுற்றுலா மையம் 5 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்படுகிறது. இதனையடுத்து இன்று முதல் வாகன சவாரி மட்டும் தொடங்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முதியவர்கள், நோய் பாதித்தவர்கள், கர்ப்பிணி பெண்கள் வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.