தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன் பலனாக தமிழகத்தின் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் ஒருசில மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
அதன்படி கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்று அத்தியாவசிய கடைகளான பால், மருந்து, காய்கறி மற்றும் மளிகை கடைகள் தவிர மற்ற கடைகள் மற்றும் சந்தைகள் அனைத்தும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வணிக வளாகங்கள், திரையரங்குகள், பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தளங்கள் இயங்க தடை. உணவகங்களில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி. மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.