தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக கொரோனா இரண்டாவது அலை கணிசமான அளவு குறைந்து வந்தது. இதனால் ஊடகங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்களுடைய மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பிய நிலையில் ஒரு சில இடங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் கோவில்களில் தரிசனத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் இன்று பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று ஆடிப்பூர விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது .எனவே கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு சாமி தரிசனம் செய்ய தடை விதிப்பதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.