வங்கி விதிகளில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதாவது பணம் எடுப்பதற்கும் டெபாசிட் செய்வதற்கும் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு கட்டாயம் என்று மத்திய அரசு பிறப்பித்துள்ள புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இந்த மாதத்தின் தொடக்கத்தில் வங்கி விதிகளில் புதிய திருத்தம் செய்து மத்திய அரசு அறிவித்தது. அதன்படி 20 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்வதற்கும் பணத்தை திரும்பப் பெறுவதற்கும் பான் கார்டு மற்றும் ஆதார ஆவணங்கள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளன. இது கூட்டுறவு வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலக வைப்புகளுக்கு பொருந்தும். அதனைப்போலவே நடப்பு கணக்கு தொடங்குவதற்கும் புதிய விதிகள் பொருந்தும். இதற்கு முன்பு பணத்தை டெபாசிட் செய்யும் போது மட்டுமே ஆவணங்கள் தேவைப்பட்டது.
ஒரு நாளைக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணத்தை டெபாசிட் செய்யும் போது பான் கார்டு தேவை. பணத்தை டெபாசிட் செய்வதற்கும் அதனை எடுப்பதற்கும் வருடாந்திர வரம்பு எதுவும் இல்லை. வருமான வரித் துறையால் அதிக அளவு பணத்தை கண்காணிக்க முடியும் என்பதால் நிதி மோசடிகளை குறைக்கும் வகையில் புதிய விதிகள் தற்போது கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் கூடுதலாக வருமான வரித்துறை இந்த விதிகள் மூலம் பணப் புழக்கத்தை விரைவாக கண்காணிக்க முடியும் எனவும் கூறியுள்ளது.