இந்திய ரெயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்தியில், அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டங்களை முன்னிட்டு 208 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் 379 பயணிகள் ரெயில்கள் என மொத்தம் 595 ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளன.
இதுதவிர, 4 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் 6 பயணிகள் ரெயில்கள் பகுதியளவாக ரத்து செய்யப்படும் என தெரிவித்து உள்ளது.
அக்னிபத் எதிர்ப்பு போராட்டத்தில், ரெயில் நிலையத்தின் டிக்கெட் கவுண்டர், நடைமேடையும் சூறையாடப்பட்டன. பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. ரெயில் நிலையத்தின் கதவு, ஜன்னல்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. நாற்காலிகள் பெயர்த்து, தண்டவாளத்தில் வீசப்பட்டன. இதுபோன்ற போராட்டங்களை அடுத்து, பயணிகளின் நலன் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது.