தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. அதனால் ஆன்லைன் மூலமாகவே பணப்பரிவர்த்தனை அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 2 மணிவரை நெப்ட் சேவை நிறுத்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனையடுத்து ஆர்பிஐ அறிவிப்பின்படி பராமரிப்பு பணி காரணமாக நெப்ட் சேவை நிறுத்தப்படுவதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது. அதனால் இன்டர்நெட் பேங்கிங், யோனோ, யோனோ லைட் உள்ளிட்டவற்றில் நெப்ட் சேவை இன்று நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 2 மணிவரை இயங்காது என அறிவித்துள்ளது.