தமிழகத்தில் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற இருந்த கலந்தாய்வு நிர்வாக காரணங்களுக்காக தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப் பட்டுள்ளதாகவும், மீண்டும் எப்போது கலந்தாய்வு நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. எனவே இன்று பொது மாறுதல் தொடர்பாக யாரும் கலந்தாய்வுக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
பள்ளி கல்வித்துறையில் 2021-2022ஆம் கல்வி ஆண்டிற்கான கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்ட அலுவலகங்கள், வட்டார மற்றும் தொகுப்பு வளமையங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பணி மாறுதல்/பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்துதல் சார்பாக நெறிமுறைகள் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 500 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கடந்த 15ஆம் தேதி கலந்தாய்வு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சில நிர்வாக காரணங்கள் அடிப்படையில் பொது மாறுதல் கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.