Categories
மாநில செய்திகள்

இன்று வங்கிகள் குறைந்த ஊழியர்களுடன்…. காலை 10 – 2 மணி வரை இயங்கும்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மே-10 முதல் ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இந்த ஊரடங்கானது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதையடுத்து ஊரடங்கு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி அலுவலங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் மக்களுடைய நிதி நிலைமையை கருத்தில் கொண்டு வங்கிகளில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் கொண்டு இயங்கலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. வங்கிகள் காலை 10 மணி முதல் 2 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |