இன்று தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டிற்கு தமிழகத்தை ஆளப்போவது யார் என்ற அனைவரும் பரபரப்பாக எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. காலை 9 மணி முதலே முன்னிலை நிலவரங்கள் தெரியவரும். ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்று இன்று மதியம் தெரிந்துவிடும். தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. மொத்தமுள்ள 234 தொகுதியிலும் 3,998 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தமிழகத்தில் 72.81% மட்டும் வாக்குகள் பதிவானது. இந்த தேர்தலில் 4 கோடியே 57 லட்சத்து 76 ஆயிரத்து 311 பேர் வாக்களித்தனர். 1 கோடியே 70 லட்சத்து 93 ஆயிரத்து 644 பேர் வாக்களிக்கவில்லை. தமிழகத்தில் 234 தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று காலை சரியாக காலை 8 மணிக்கு 75 மையங்களில் எண்ணப்படுகிறது.