தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து இன்று காலை 10.30 மணிக்கு சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் நான்கு ஆண்டுகள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா சிறை வாசத்தை முடித்து பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து இன்று காலை 10.30 மணிக்கு விடுதலையாக உள்ளார். நீண்ட நாட்களாக தமிழக ஊடங்களில் எழுந்த, “சசிகலா விடுதலைக்கு பின் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுமா?” என்ற கேள்விக்கு விடை கிடைக்க உள்ளது.
மேலும் சசிகலா அதிமுகவை கைப்பற்றுவாரா அல்லது அமமுக மூலம் மற்ற கட்சிகளுக்கு தொல்லை கொடுப்பாரா என்பதுபற்றி இனிதான் தெரிய வரும். உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் சசிகலா, இன்று விடுதலை செய்யப்படுகிறார். மேலும் அவர் உடல்நிலை பூரண குணமடைந்த பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்புவார்.