பெங்களூருவில் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சசிகலா சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தொற்று அறிகுறிகள் நீங்கி உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று காலை சிறைத்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று முறைப்படி அவரை விடுவிக்கும் ஆவணங்களை அவரிடம் வழங்குகின்றனர்.
உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அவர் மருத்துவமனையில் இருந்து சென்னை வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஏற்கனவே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.