தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவி வருவது பெரும் துயரத்தை கொடுத்து வருகிறது. இதனை சமாளிப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடங்கி தடுப்பு பணிகள் வரை பணிகளை துரிதப்படுத்தி உள்ளது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீட்டிற்குள் முடங்கி இருக்கும் மக்களுக்கு ரேஷன் மூல.ம் தமிழக அரசு நிவாரணம் வழங்கி வருகிறது.
கொரோனா நெருக்கடியை சமாளிக்க தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் விடுமுறை நாளான இன்று (வெள்ளிக்கிழமை) ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனை ஈடுசெய்யும் வகையில் வேறொரு நாளில் விடுமுறை தரப்படும் என்றும் தெரிவித்துள்ளது