Categories
தேசிய செய்திகள்

இன்று விவசாயிகளின் வங்கிக்கணக்கில்…. ரூ.2000 செலுத்தப்படும் – வெளியான தகவல்…!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறது.  இதுவரை ஏழு தவணைகளாக பிரிக்கப்பட்டு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து எட்டாவது தவணையை இன்று  ஈகை திருநாளை முன்னிட்டு பிரதமர் மோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |