சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் திட்டமிட்டபடி இன்று வெளியாகும் என்று இயக்குனர் வெங்கட்பிரபு ட்விட்டரில் அறிவித்துள்ளார். மாநாடு திரைப்படம் தள்ளி வைக்கப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். இந்த செய்தியை ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அதனால் திட்டமிட்டபடி மாநாடு திரைப்படம் இன்று வெளியிடப்பட வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் தயாரிப்பாளருக்கும் பைனான்சியருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.