Categories
சினிமா தமிழ் சினிமா

“இன்று வெளியானது மாஸ் அப்டேட்!”…. இந்த படத்தோட first single?…. எப்போ வெளியாகும் தெரியுமா?!!!!

தனது 18 வயதில் ‘மாப்பிள்ளை’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அருண் விஜய் இளம் வயதிலிருந்தே ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வெளிவந்த ‘இயற்கை’ மற்றும் சேரன் இயக்கத்தில் வெளிவந்த ‘பாண்டவர் பூமி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

பின்னர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராகவும் உயர்ந்தார். தற்போது அருண் விஜய் ‘யானை’ என்ற படத்தில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் யோகிபாபு, ராதிகா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்திலும், பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று மாலை ‘யானை’ படத்தின் அடுத்த அறிவிப்பு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்திருந்தது. அந்த வகையில் படக்குழு தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது ‘யானை’ படத்திலிருந்து first single வருகின்ற ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே இந்த ‘யானை’ திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றதோடு ஆவலையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |