Categories
மாநில செய்திகள்

இன்று 144 தடை உத்தரவு அமல்…. மீறினால் கடும் நடவடிக்கை – அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி  புதுச்சேரியில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள வருகிறார்.

இதனால் புதுச்சேரி மாநிலம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதையடுத்து புதுச்சேரியில் இன்று ஒரு நாள் மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடை உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

 

Categories

Tech |