இந்தியாவில் கோடிக் கணக்கான மக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இச்சேவையில் பேருந்து கட்டணங்களை விட குறைவாக உள்ளதால் மக்கள் அதிகளவில் இந்த ரயில் சேவையை தேர்ந்தெடுக்கின்றனர். இதையடுத்து ரயில்வே நிர்வாகமும் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துவருகிறது. அதன்படி மக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்றவாறு சிறப்பு ரயில்சேவைகளும் இயக்கப்பட்டு வருகிறது. அத்துடன் விரைவான போக்குவரத்தை விரும்பும் மக்களுக்கு இச்சேவை ஏற்றதாக உள்ளது. இதனை தவிர்த்து முன்பதிவு வசதிகள், இருக்கை வசதிகள் ஆகிய சேவைகளை மக்கள் வசதிக்கேற்ப ஏற்படுத்தி வருகிறது.
இதனால் ரயில் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இந்திய ரயில்வே நிர்வாகம் இப்போது பாதியளவு ரயில் சேவைகளை மின்ரயில் சேவையாக மாற்றி வருகிறது. அதன் காரணமாக அனைத்து பயணிகள் ரயில்களும் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இதனால் ரயில் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் ரயில் தடங்களில் குறிப்பிட்ட காலஇடைவெளியில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இப்போது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்யும் வகையில் பராமரிப்புபணிகள் நடைபெறவுள்ளதால் இன்று(செப்.4) 173ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக இந்திய ரயில்வேயானது தெரிவித்துள்ளது. அத்துடன் 37 ரயில்களின் தொடக்கஸ்டேசன்கள் மாற்றப்பட்டுள்ளது. மேலும் 41-ரயில்கள் கடைசி ஸ்டேசன்களில் இடம்மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.