தமிழகத்தில் இன்று மட்டும் 34 மாவட்டங்களில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை சார்பில் இன்று கொரோனா பாதிப்பு குறித்த அறிக்கை வெளியாகியது. அதில் தமிழகத்தில் 50 அரசு பரிசோதனை மையங்களும், 46 தனியார் பரிசோதனை மையங்களும் சேர்த்து 96 மையங்கள் உள்ளன. இன்று மட்டும் 35,423 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 13,52,360ஆக இருக்கின்றது. இன்று மட்டும் 34 மாவட்டங்கள் மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதிதாக 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,203 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், மொத்த எண்ணிக்கை 71,230ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை இல்லாத அளவாக இன்று மட்டும் 4,545-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் 71,116 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இன்று மட்டும் 65 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த எண்ணிக்கை 1,636-ஆக அதிகரித்துள்ளது. அதே போல 45,839 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஈரோடு , அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் புதிதாக தொற்று உறுதியாகவில்லை.