தமிழகத்தில் 2 மாவட்டத்தில் இன்று (30ஆம் தேதி) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது..
இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது மாவட்டங்களில் பெய்யும் மழையின் தாக்கத்தை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கடந்த சில நாட்களாக விடுமுறை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், நேற்று 26 மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்ட நிலையில், திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (30ஆம் தேதி) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.