தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.. இந்நிலையில் இன்று திண்டுக்கல், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 27ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும், 28, 29 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
அதாவது, இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை தொடரும். சென்னையில் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.. சில இடங்களில் மழை பெய்யலாம். தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக் கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.