Categories
மாநில செய்திகள்

இன்று 5 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை…. வானிலை மையம் அறிவிப்பு…!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இந்த ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் இன்று கனமழை பெய்யும்.

மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். மேலும் அரபிக் கடல் பகுதிகளில் வரும் 27ஆம் தேதி வரை மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Categories

Tech |