Categories
தேசிய செய்திகள்

இன்று 6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு… குஷியில் மாணவர்கள்….!!!

கர்நாடக மாநிலத்தில் இன்று, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் படுகின்றது.

கர்நாடகா மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் முதற்கட்டமாக ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதற்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இரண்டாம் கட்டமாக 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் பள்ளிகள் திறக்கப் படுகின்றது.

சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும், 50 சதவீத குழந்தைகள் மட்டுமே வகுப்பறையில் அமர வைக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அனைத்து பள்ளிகளிலும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படுவதால் குழந்தைகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Categories

Tech |