கேரள மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வினால் மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. நேற்று மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் மிக கன மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து இன்று பத்தினம்திட்டா, கோட்டயம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
இதனால் இந்த மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. அதனைபோலவே மலையோர மாவட்டங்களான மலபுரம் வயநாடு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஆபத்தான பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது என்று தெரிவித்துள்ளது.