தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று(ஜூலை 24) நடைபெறவுள்ளது. தமிழகத்தில் கிராமநிர்வாக அலுவலர் டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் போன்ற பணி இடங்களுக்காக நடத்தப்படும் குரூப்-4 தேர்வானது சென்ற 2 ஆண்டுகளாக பரவிய கொரோனா காரணமாக நடைபெறவில்லை. இதையடுத்து இந்த வருடம் தேர்வு நடந்த முடிவு செய்யப்பட்டு கடந்த மார்ச் மாதம் அதற்குரிய அறிவிப்பு வெளியாகியது.
அதன்பின் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. அவற்றில் 7,382 காலிப் பணியிடங்களுக்கு சுமார் 21.85 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இந்நிலையில் நாளை நடைபெறும் குரூப் 4 தேர்வில் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி, தேர்வர்கள் காலை 8:30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு சென்று விட வேண்டும். 9 மணிக்கு OMR தாள்கள் தேர்வர்களுக்கு வழங்கப்பட்டு விடும். 12.30 மணி வரை தேர்வு நடைபெறும். அதற்கு முன்னதாக தேர்வுகள் யாரும் தேர்வறையை விட்டு வெளியேறக்கூடாது.
கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும். செல்போன்கள் மற்றும் இதர பொருட்களை தேர்வு மையத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. தேர்வர்கள் தங்களுடைய கையெழுத்தை OMR தாளில் இரண்டு இடங்களில் பதிவு செய்ய வேண்டும். OMR தாளில் இடது கை பெருவிரல் ரேகையை தேர்வு முடிந்த பின் பதிவிட வேண்டும். கருப்பு பால்பாயிண்ட் பேனாவை தவிர பென்சில் அல்லது வேறு பேனாவில் எழுதக்கூடாது. தேர்வர்கள் தங்களுடைய பதிவு எண்ணை கட்டாயமாக குறிப்பிட வேண்டும். ஒரு கட்டத்தை தவிர ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டங்களை விடைகளாக குறிக்க கூடாது. விடை தெரியாத கேள்விக்கு OMR தாளில் உள்ள E என்கிற கட்டத்தில் shade செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.