Categories
தேசிய செய்திகள்

இன்று(1.05.21) முதல் முக்கிய மாற்றங்கள்…. என்னென்ன தெரியுமா..? மொத்த லிஸ்ட் இதோ…!!!!

ஒவ்வொரு மாதமும் புதிய விதிமுறைகளை மத்திய, மாநில அளவில் அறிவிக்கப்படும். அடுத்து வரும் மாதம் தான் அமலுக்கு வரும். இதுபோக காலக்கெடுகளும் விதிக்கப்படும். இதன்படி மே மாதம் மாறப்போகும் விதி முறைகள் பற்றி இப்போது பார்க்கலாம். சமையல் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில்  மாற்றம் செய்யப்படுகிறது.  இந்நிலையில்  மே 1ஆம் தேதி முதல் சிலிண்டர் விலை உயருமோ என்ற பயத்தில் பொதுமக்கள் இருக்கின்றனர். கடந்த முறை சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மே 1 முதல் மே 4 வரை, தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்பதால் வாடிக்கையாளர்கள் சிரமத்தை சந்திக்க வேண்டியிருக்கும். எனினும் இந்த விடுமுறைகள் வெவ்வேறு மாநிலங்களுக்கு ஏற்ப இருக்கும். மே மாதத்தில் மொத்தம் 11 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும்.

மே 1 முதல் சில்லறை முதலீட்டாளர்களுக்கான UPI கட்டண வரம்பு உயர்த்தப்படுகின்றது. பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபியின் புதிய விதிகளின்படி, மே 1க்குப் பிறகு ஒரு நிறுவனத்தின் ஐபிஓவில் முதலீடு செய்ய, யுபிஐ மூலம் பணம் செலுத்தும்போது ரூ.5 லட்சம் வரை ஏலத்தைச் சமர்ப்பிக்கலாம். தற்போது இந்த வரம்பு ரூ.2 லட்சமாக உள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பிறகு வரும் அனைத்து ஐபிஓக்களுக்கும் புதிய வரம்பு செல்லுபடியாகும்.

Categories

Tech |