தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது நவம்பர் 29ஆம் தேதி தொடங்கியது. இதனால் பல மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கியது. எனவே கன மழை காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறைகள் அளிக்கப்பட்டன.
அந்த வகையில் சென்னையில் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் இன்று(3.12.22) சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதே போல மற்ற மாவட்டங்களுக்கும் விரைவில் அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.