கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டாறு ஆதி கேசவ பெருமாள் கோயில் குட முழுக்கு விழாவினை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி நிறுவனங்களுக்கு ஜூலை 6ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மேலும் இந்த விழாவுக்காக நாகர்கோவில், மார்த்தாண்டம், குலசேகரம், தக்கலை உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த விழாவினை கான பக்கத்து ஊர்களிலுள்ள ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.