இந்தியாவில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடைபெறும் சிவில் சர்வீஸ் தேர்வான ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகிய பணியிட தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் ஏதேனும் ஒரு பட்ட படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்த தேர்வில் தமிழகத்திலிருந்து தேர்வாகிறவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. எனவே சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தமிழக மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில் அரசு சார்பாக பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மையம், தமிழக இளைஞர்களுக்கு குறிப்பாகக் கிராமப்புறப் பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஐஏஎஸ்/ஐபிஎஸ் முதல் நிலைத்தேர்வு எழுத விரும்புவோருக்கு தமிழ்நாடு அரசு சென்னை, மதுரை, கோவை மாவட்டங்களில் இலவச பயிற்சியளிக்கிறது. இதற்கு ஆர்வமுள்ள தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க இன்று (டிசம்பர் 28) கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் இன்று முதல் www.civilservicescoaching.com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.