Categories
தேசிய செய்திகள்

இன்றே கடைசி நாள்: உடனே விண்ணப்பிக்கவும்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!

2009 ஆம் வருடம் இயற்றப்பட்ட குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியர் நியமனம் செய்வதற்கு குறைந்தபட்ச கல்வி தகுதியாக ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதன்படி கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்கள் நியமனங்களுக்கு மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இதை மத்திய இடைநிலை கல்வி வாரியம் ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது.

இந்த நிலையில்  மத்திய அரசுப் பள்ளிகளில் 1 முதல்  8ம் வகுப்பு வரையில் ஆசிரியராக பணிபுரிவதற்கு சிபிஎஸ்இ ஆல் நடத்தப்படும் 16வது மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பிக்கவும். எழுத்துத் தேர்வு உத்தேசமாக டிச., 2022 (அ) ஜனவரி 2023-க்கும் இடைப்பட்ட நாள்களில் நடைபெறும். www.ctet.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Categories

Tech |