தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாத இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையம் வெளியிட்டு வருகிறது.
அதன்படி தமிழ்நாடு தொழில் சார்நிலை பணிகளில் அடங்கிய வேதியியலர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. SC/ST, BC, MBC(OBC) விண்ணப்பிக்கலாம். மார்ச் 19ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும். தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை. மேலும் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, வயதுவரம்பு உள்ளிட்ட முழு தகவல்களை அறிய https://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம்.