பேங்க் ஆப் பரோடா இன்று ஆன்லைனில் மெகா ஏலம் நடத்துவதாக அறிவித்துள்ளது.
சொந்த வீடு, சொத்து, நிலம் போன்றவை வாங்க வேண்டும் என்பது பலரின் வாழ்க்கையில் பெரும் கனவு. அதிலும் மார்க்கெட் விலையை காட்டிலும் குறைந்த விலைக்கு வீடு சொத்து வாங்க வாய்ப்பு கிடைத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். அதற்காக ஒரு அரிய வாய்ப்பு வந்துள்ளது. அதாவது பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் பரோடா இன்று (மார்ச் 4 )ஆன்லைனில் வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த மெகா ஏலத்தில் மார்க்கெட்டை விட குறைந்த விலைக்கு நிலம் வீடு உள்ளிட்ட சொத்துக்களை வாங்கலாம். சர்ஃபேசி திட்டத்தின் கீழ் இந்த மெகா ஏலம் நடத்தப்படுகிறது. இதன் மூலமாக இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சொத்துக்களை வாங்க முடியும். மேலும் இதில் விற்கப்படும் சொத்துகளின் விபரம் குறித்து காண்போம்.
* வீடுகள்
* நிலம்
* அலுவலக இடங்கள்
* தொழில்துறை சொத்துகள்
* Flats
உடனடியாக சொத்து உங்களிடம் வழங்கப்படும். எளிதான கண்டிஷன்களுடன் கடனும் பெற்றுக்கொள்ளலாம். இந்த ஏலத்தில் பங்கேற்க https ://www .bankofbaroda.in / e-auction இணையதளத்துக்கு செல்லவும்.