Categories
சென்னை மாநில செய்திகள்

இன்றைக்கு சொல்லணும்…! ஒரே நாள் கெடு விதித்த ஐகோர்ட்… மிரளும் தமிழக அரசு …!!

காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட முடியாது என்பதால் காலதாமதம் செய்யலாமா ? என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருக்கின்றார்கள்.

கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாசிலாமணி என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழக காவல்துறையினர் தொடர்ச்சியாக எவ்வித சூழலிலும் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக பணியாற்றுகின்றனர். விஐபிகள் வரும் காலங்களில் சாலையோரங்களில் நின்று பொதுமக்களை பாதுகாத்து வருகின்றனர். தமிழத்தில் ஆயிரம் பேருக்கு இரண்டு காவலர்கள் என்ற விகிதத்திலேயே உள்ளது.

மேலும் குறைந்த ஊதியத்தில் பணி புரிந்திருக்கின்றனர். இவற்றை கருத்தில் கொண்டு 24 மணி நேரமும் பணியில் ஈடுபடும் தமிழக காவல்துறையினரின் ஊதியத்தை உயர்த்தி தரவேண்டும். அதேபோல காவல்துறையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது தமிழக காவல் துறையினருக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் பிற மாநிலங்களில் காவல் துறையினருக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்த விவரங்கள் மற்றும் காவல்துறையினர் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்? அவர்களுக்கென தனி காப்பீடு உள்ளதா ? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் எழுப்பி நீதிபதிகள் பல்வேறு உத்தரவு பிறப்பித்திருந்தார்கள்.

இந்த மனு நேற்று நீதிபதி கிருபாகரன் – புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், இது தொடர்பாக பதிலளிக்க கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது. அதற்கு நீதிபதிகள் காவலர்களுக்கு உள்ள பிரச்சனைகளுக்கு என்ன செய்ய திட்டமிட்டுள்ளீர்கள் ? என்ற கேள்விக்கு பதில் அளிப்பதில் என்ன பிரச்சினை என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து மற்ற துறையை சார்ந்தவர்கள் போராட்டங்களை நடத்தி தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கின்றனர். காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட முடியாது என்பதால் இவ்வாறு காலதாமதம் செய்யலாமா ? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இன்று மதியத்துக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் தமிழக உள்துறை செயலர்,  தமிழக காவல்துறை தலைவர் ஆஜராக நேரிடும் என எச்சரிக்கை விடுத்து வழக்கு விசாரணையை இன்று ஒத்தி வைத்தார்கள். இந்த வழக்கில் அரசு பதில் அளிக்க ஒரு நாள் மட்டுமே கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |