தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 5,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,96,901 ல் இருந்து 3,02,815 ஆக அதிகரித்தது. 6,037 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,44,675 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 53,099 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் இன்று மட்டும் 976 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,10,121 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 11,328 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 80.80% குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 114 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா உயிரிழப்பு 5,041 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 65,141 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 31,74,849 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 35 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 53,099 ஆக உள்ளது. தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு :
சென்னை-976
செங்கல்பட்டு- 483
திருவள்ளூர்-399
தேனி- 357
காஞ்சிபுரம்- 310
கோவை -292
கடலூர்- 287
குமரி – 205
தூத்துக்குடி-196
வேலூர் -189
விருதுநகர்-189
ராணிப்பேட்டை- 184
திண்டுக்கல்-173
தி.மலை -154
புதுக்கோட்டை- 133
சேலம்-128
தஞ்சை-123
தென்காசி-114
மதுரை-100
விழுப்புரம்-89
க.குறிச்சி-85
திருப்பத்தூர்-84
நெல்லை- 83
சிவகங்கை-59
அரியலூர் – 54
கிருஷ்ணகிரி- 58
நாகை-57
திருச்சி-56
திருப்பூர்- 48
கரூர்-44
ஈரோடு-37
பெரம்பலூர்-35
ராமநாதபுரம்- 35
திருவாரூர்- 30
நாமக்கல்- 29
தர்மபுரி – 18
நீலகிரி – 7