தமிழகத்தில் புதிதாக 223 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 223 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். 596 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 3,131 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பானது 34,50,817-ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 34,09,674 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த உயிரிழப்பானது 38,012-ஆக உயர்ந்துள்ளது. அதில் அதிகபட்சமாக மாவட்ட அளவில் சென்னையில் 67 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் 100-க்கும் கீழாகவே தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.